வித்தியாசமான தமிழ் பெயரில் “நுண்ணுணர்வு” திரைப்படம்

Bookmark and Share

வித்தியாசமான தமிழ் பெயரில் “நுண்ணுணர்வு” திரைப்படம்

“நுண்ணுணர்வு” என்ற பெயரில் புது முகங்களை கொண்ட திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் வரவுள்ளது. இந்த படத்தை மதிவாணன் சக்திவேல் நடித்து இயக்கியுள்ளார். இது இவருடைய இரண்டாவது திரைப்படம்.

“நுண்ணுனர்வு”என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டபோது, அர்த்தத்தை கண்டுபிடிக்க படம் பார்க்க வேண்டும் என்றும் தனது படத்தின் மூலம் பழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் பெயரை அறிமுகப்படுத்துவதில் பெருமை என்று கூறினார் மதிவாணன்.

கடித காதல், டெலிபோன் காதல், இன்டர்நெட் காதல், என்ற வகையில் வித்தியாசமான காதல், திகில் நிறைத்த “நுண்ணுணர்வு” காதல் என்றார் மதிவாணன். இந்த படம் ஆஸ்திரேலியாவை கதைக்களமாக கொண்ட படம். இந்த படத்தை விருது பெற்ற எடிட்டர் சுரேஷ் அர்ஸ் எடிட் செய்துள்ளார்.

வெறும் பாடல்களுக்கு மட்டும் வெளிநாடு படபிடுப்பு செல்லும் தமிழ் பட ட்ரெண்டில் விலகி, முழுக்க முழுக்க வெறும் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுத்த மதிவாணன் அவரை பாராட்டி, ‘நுண்ணுணர்வு” படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions