ஹிந்தியில் ஓ காதல் கண்மணி

Bookmark and Share

ஹிந்தியில் ஓ காதல் கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து ஏப்ரல் 17ம் தேதி வெளிவந்து வெற்றி பெற்ற படம் ஓ காதல் கண்மணி.

முந்தைய படங்களின் தோல்வியிலிருந்து மணிரத்னத்தை மீட்ட படம்தான் ஓ காதல் கண்மணி. தமிழில் ஏ சென்டர்களில் மிகப் பெரிய வெற்றியையும், பி அன்ட் சி சென்டர்களில் சுமாரான வெற்றியையும் இந்தப் படம் பெற்றது.

தெலுங்கில் ஓகே பங்காரம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இப்போது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் நாயகனாக ஆதித்ய ராய் கபூர், நாயகியாக சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்க உள்ளார்களாம்.

படத்தை மணிரத்னத்தின் முன்னாள் ஹிந்தி உதவி இயக்குனர் ஷாத் அலி இயக்க உள்ளார். நாயகனாக நடிக்கும் ஆதித்ய ராய் கபூர், ஹிந்தி நடிகை வித்யா பாலனின் மைத்துனர் ஆவார்.

இதற்கு முன் ஹே ஜவானி ஹை திவானி, ஆஷிக் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா யாரென்று உங்களுக்குத் தெரியும். ரஜினிகாந்த் நடித்த தோல்விப் படமான லிங்காவில் நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்.விரைவில் ஓ காதல் கண்மணி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions