நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!

Bookmark and Share

நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!

நித்யா மேனன், தமிழில் இதுவரை ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாமலே இருந்து.

இங்கு வெற்றி பெறாமலே இருந்தால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால், நித்யாவைப் பொறுத்தவரையில் அப்படி எதுவுமே நடக்காமல் அவருக்கு ஒரே நேரத்தில் நான்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

தமிழில் ஒரே நாளில் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் 'ஓ காதல் கண்மணி' தெலுங்கில் 'ஓகே பங்காரம்' என்ற பெயரில் டப்பிங் ஆகி அதே தினத்தில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.

கடந்த வாரம் 'காஞ்சனா 2' படம் 'கங்கா' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி அந்தப் படமும் வெற்றி பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்த இரண்டு படங்கள் நான்கு படங்களாகி அவருக்கு நான்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

மேலும் இரண்டு படங்களிலும் முற்றிலும் இருவேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் நித்யா.

தெலுங்கில் ஏற்கெனவே பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள நித்யாவுக்கு 'ஓகே பங்காரம், கங்கா' படங்களின் வெற்றி மேலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனி, தமிழிலும் வெற்றிகரமான நாயகியாகவே நித்யா வலம் வருவார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions