விருந்து நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் பிரியங்கா சோப்ரா பேசியது என்ன?

Bookmark and Share

விருந்து நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் பிரியங்கா சோப்ரா பேசியது என்ன?

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இதன்படி இந்த விருந்து நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. 

அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால், அவர் பதவிக்காலத்தில் நடக்கும் கடைசி விருந்து என்பதால், விருந்து நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், கலகலப்பாகவும் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை, பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா(33) தற்போது, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடித்த, 'குவான்டிகோ' என்ற, 'டிவி' தொடர், அமெரிக்காவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது; இதனைத் தொடர்ந்து, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, அவர், அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், ஒபாமாவுடனான தனது சந்திப்பு குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா “மிகவும் வேடிக்கையான மற்றும் அழகான ஒபாமா மற்றும் அழகான மிச்சேல் ஒபாமாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு அழகான மாலைக்கு (விருந்துக்கு) நன்றி. உங்கள் பெண்கள் கல்வி திட்டத்தில் சேர்ந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா ‘சிறுமிகளை கல்வி கற்க அனுமதிப்போம்’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இத்திட்டம் மூலம் உலகம் முழுவதும் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் 62 மில்லியன் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப முயற்சி எடுத்து வருகிறார். இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்து செயல்படவுள்ளார். 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions