தெலுங்கிலும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஓ காதல் கண்மணி பாடல்கள்!

Bookmark and Share

தெலுங்கிலும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஓ காதல் கண்மணி பாடல்கள்!

இயக்குநர் மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' என்ற படத்தை தமிழில் இயக்கி வருகின்றார். இப்படம்  ஓகே பங்காரம் என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது.

மலையாள  நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சையமான நடிகை நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகை கனிகா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'ஓ காதல் கண்மணி'  படத்தின் பாடல்கள் எதிர் வரும் 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினத்திலேயே இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ஓகே பங்காரம் படத்தின் பாடல்களும் திரைக்கு வருவதாக தெரிகின்றது.

ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டில் ராஜு வெளியிடவுள்ளார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions