முன்னோட்டமாக வரும் துல்கர் சல்மானின் ’100 நாள் காதல்’

Bookmark and Share

முன்னோட்டமாக வரும் துல்கர் சல்மானின் ’100 நாள் காதல்’

மார்ச், ஏப்ரல் இரண்டு மாதங்களும் துல்கர் சல்மானுக்கு மிக முக்கியமானவை.. காரணம் மார்ச்-20ஆம் தேதி துல்கர் நடித்த ’100 டேஸ் ஆப் லவ்’ படமும், ஏப்ரல் 14ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ’ஓ காதல் கண்மணி’ படமும் வெளியாக இருக்கின்றன.

இரண்டிற்கும் 23 நாள் இடைவெளிதான் இருக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமும் அதேசமயம் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. காரணம் இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகி நித்யா மேனன் தான்.

உஸ்தாத் ஹோட்டல் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்திருப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், ஒரே ஜோடி நடித்த படங்களை  அடுத்தடுத்து பார்க்கும்போது இரண்டாவதாக பார்க்கும் படத்தில் முதல் படத்தின் சாயல் கொஞ்சம் எட்டிப்பார்க்கும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த பிரச்சனை கூட மலையாள ரசிகர்களுக்குத்தான்.. தமிழ் ரசிகர்கள் ’ஓ காதல் கண்மணி’யை மட்டும் தானே பார்க்கப்போகிறார்கள். ’100 டேஸ் ஆப் லவ்’ படத்தில் துல்கர் ஒரு பத்திரிகையின் எடிட்டராக வேலை பார்க்கிறார்.

அவரது நண்பர் சேகர் மேனன்.. எந்நேரமும் எதையாவது கொறிப்பது தான் அவரது வேலை. இந்த இருவரும் ஒருநாள் இரவில் ஜாலியாக நகர் உலா வரும்போது ஜாலியாக திரியும் நித்யா மேனனை பார்க்கிறார்கள்.

படிப்பை முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் வாழ்க்கையை என்ஜாய் பண்ணும் நித்யா மேனனுக்கும் துல்கருக்கும் காதல் கெமிஸ்ட்ரி பற்றிக்கொள்கிறது. அதன் பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான் படத்தின் கதை.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions