50வது நாளில் இரண்டு படங்கள்...!

Bookmark and Share

50வது நாளில் இரண்டு படங்கள்...!

தமிழ்த் திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளிவந்த இரண்டு படங்கள், 50வது நாள் வரை தொட்டிருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'ஓ காதல் கண்மணி', ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா 2' ஆகிய படங்கள் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கின்றன.

இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் மாதம் 17ம் தேதி வெளியாகின. மணிரத்னம் அதற்கு முன் இயக்கிய சில படங்கள் வியாபார ரீதியாகத் தோல்வியைத் தழுவிய நிலையில் 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது.

இருந்தாலும் அவருடைய வழக்கமான 'டச்' இந்தப் படத்தில் அதிகம் இருந்ததால் படம் கமர்ஷியலாகம் வெற்றி பெற்றது. குறிப்பாக ஏ சென்டர்களிலும், வெளிநாடுகளிலும்  படம் நல்ல வசூலை அள்ளியது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்து வெளிவந்த 'காஞ்சனா 2' படம் அவருடைய முந்தைய 'முனி, காஞ்சனா' படங்களின் அடுத்த பாகமாக வந்தது. இந்தப் படத்திலும் மீண்டும் பேயைக் காட்டி பயமுறுத்தி, சிரிக்கவும் வைத்து சிறுவர், சிறுமியர்களையும் கவர்ந்து படத்தை வெற்றி பெற வைத்துவிட்டார்.

பி அன்ட் சி சென்டர்களில் அமோக வசூலையும், ஏ சென்டர்களில் நல்ல வசூலையும் அள்ளி இதுவரை இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று பெயரை இந்தப் படம் தட்டிச் சென்றது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions