'ஓ காதல் கண்மணி' கதை இதுதான்...?

Bookmark and Share

'ஓ காதல் கண்மணி' கதை இதுதான்...?

மணிரத்னம் படம் என்றாலே அந்தப் படத்தைப் பற்றிய ஒரு விஷயம் கூட வெளியே வராது. இன்னும் சில நாட்களில் படம் வெளிவர உள்ளது. ஆனால், இதுவரை மீடியாக்களுக்கு அந்தப் படத்தின் புகைப்படங்களைக் கூடத் தரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த அளவிற்கு தன்னுடைய படங்களின் ரகசியங்களைக் காப்பவர் மணிரத்னம். மீடியாக்கள்தான் தன்னுடைய படங்களுக்கு உதவியாக இருக்கிறதென்று நினைக்கவே மாட்டார்.

தன்னுடைய படங்கள் என்றாலே அது ஓடி விடும் என்று அதீதமான நம்பிக்கை வைத்திருப்பார். அந்த நம்பிக்கைக்கு இடியைக் கொடுத்த படங்கள்தான் 'ராவணன், கடல்'. இதற்கு முன் அவர் இயக்கிய படங்களின் கதைகள் கூட 'ராமாயணம், மகாபாரதம்' போன்ற இதிகாசங்களில் இருந்தும், சில நிஜ மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் எடுக்கப்பட்டவைதான்.

ஆனால், அவற்றை ஏதோ ஒரு புது கதையைப் போல மாயை ஒன்றை ஏற்படுத்திவிடுவார். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் கதை என்ன என்பதை இதுவரை சொல்லவில்லை. ஆனால், படத்தின் தெலுங்கு  உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் ஹைதராபாத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதை என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.

படத்தின் கதை இதுதான்... துல்கர் சல்மான், நித்யா மேனன் இருவரும் மும்பையில் வேலை செய்கிறார்கள். இருவருக்கும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளும் இருவரும், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழலாம் என முடிவெடுக்கிறார்களாம், அதாவது லிவிங் டுகெதர்.

அப்படி அவர்கள் வாழ ஆரம்பித்த போது காதலிக்க ஆரம்பித்தார்களா அல்லது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்களா, இல்லை திட்டமிட்டபடி வெளிநாட்டுக்குச் சென்றார்களா என்பதுதான் படத்தின் கதையாம்.

'அலைபாயுதே' மாதிரி இருக்கிறதே என்றெல்லாம் கேட்கக் கூடாது. நம் காதில் விழுந்த கதையைத்தான் உங்களுக்காக தந்திருக்கிறோம். படம் வெளியானதும் கதை என்ன என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions