இன்று நள்ளிரவில் 'ஓகே கண்மணி' இசை...

Bookmark and Share

இன்று நள்ளிரவில் 'ஓகே கண்மணி' இசை...

இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி என்றாலே இசை ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களோடு மணிரத்னத்தின் ஆரம்ப கால கூட்டாளியான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வேறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருப்பதால் 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு நிறையவே வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர்கள் யூடியூப் இணையதளங்களில் அதிகமாகப் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் இணையம் மூலமாக இந்தப் படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள்.

மணிரத்னத்தின் தயாரிப்பு என்றாலே அந்தப் படத்தைப் பற்றிய பிரமோஷன்கள் அதிகமாக இருக்காது. ஏன், இன்னும் 'ஓகே கண்மணி' படத்தின் புகைப்படங்களைக் கூடப் பத்திரிகைகளுக்குத் தரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காலத்திற்கேற்றபடி தன்னையும் மாற்றிக் கொள்ளும் மணிரத்னம் 'ஓகே கண்மணி' படத்தின் பிரமோஷனுக்கு இணைய ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

அஜித் படம் போன்றே 'ஓகே கண்மணி' படத்தின் இசையை நள்ளிரவு நேரத்தில் வெளியிட முடிவெடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். முதலில் இந்தப் படத்திற்கு 'ஓகே கண்மணி' எனப் பெயர் வைத்து அதன் பின் 'ஓ காதல் கண்மணி' என்று மாற்றினார்கள்.

இருந்தாலும் யு டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற மெட்ராஸ் டாக்கீசின் அதிகாரப்பூர்வ தளங்களில் படத்தின் பெயரை ஆங்கிலத்தில் 'ஓகே கண்மணி' என்றே குறிப்பிட்டு ரசிகர்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பெயரை பயன்படுத்தினால்தானே ரசிகர்களும் குழம்பாமல் இருக்க முடியும். ஏதாவது ஒரு பெயரை 'ஓகே' பண்ணுங்கப்பா...


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions