ஓகே கண்மணி டைட்டில் மாற்றமில்லை

Bookmark and Share

ஓகே கண்மணி டைட்டில் மாற்றமில்லை

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் ஓகே கண்மணி. இதில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான். நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா, நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை சத்தமே இல்லாமல் ஆரம்பித்த மணிரத்னம் தற்போது அதனை முடித்து விட்டார். அலைபாயுதே டைப்பிலான புதுமையான காதல் கதை என்று கூறப்படுகிறது.

இதுவரை படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாத மணிரத்னம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பர்ஸ்ட்லுக் மூலம் ஓகே கண்மணி என்ற டைட்டிலை மட்டும் உறுதி செய்தார். ஓகே என்ற ஆங்கிலச் சொல் இருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தின் தலைப்பை ஓ காதல் கண்மணி என்று மாற்றி விட்டதாகவும், ஓகே என்பதன் விரிவாக்கம் ஓ காதல் என பொருள் கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் படத்தின் தலைப்பு ஓகே கண்மணிதான் என்பதில் மணிரத்னம் உறுதியாக இருக்கிறார். வரிவிலக்கு பற்றி கவலையில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் முதல் போஸ்டரும் அதனை உறுதி செய்கிறது.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions