தமிழ் புத்தாண்டில் வெளிவருகிறது ஓகே கண்மணி?

Bookmark and Share

தமிழ் புத்தாண்டில் வெளிவருகிறது ஓகே கண்மணி?

‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ.கே.கண்மணி’. இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ‘ஆட்டோகிராப்’, ‘வரலாறு’ ஆகிய படங்களில் நடித்த கனிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம்-பி.சி.ஸ்ரீராம் கூட்டணி இந்த படத்தில் இணைந்திருக்கிறது. வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் வேளையில், படத்தை தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் ஏப்ரல்-14-ந் தேதிதான் வெளியானது. ‘அலைபாயுதே’ வெளிவந்து 15 வருடங்கள் ஆனநிலையில், அதை கொண்டாடும் விதமாக இந்த படத்தை அதே தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஓகே கண்மணி’, ‘அலைபாயுதே’ பாணியில் ரொமான்ஸ் கலந்த காதல் கதையாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions