'ஓ காதல் கண்மணி' - அமிதாப் பச்சன் பாராட்டு

Bookmark and Share

'ஓ காதல் கண்மணி' - அமிதாப் பச்சன் பாராட்டு

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் திரையுலகத்தினர் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பலரும் மணிரத்னம் மீண்டும் அவருடைய சக்சஸ் ஃபார்முலாவிற்கு வந்துவிட்டார் என அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வரிசையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இடம் பெற்றுவிட்டார். அது பற்றி அவருடைய வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, “நானும் எனது மகளும் மணிரத்னத்தின் புத்தம் புதிய, ஃபிரஷ்ஷான படத்தைப் பார்த்தோம்.

இளைஞர்களிடம் காணப்படும் காதலை இனிமையாகவும், அருமையாகவும் சொல்லியிருக்கிறார். கால மாற்றத்திற்கேற்றபடியான விஷயத்தை, இந்தக் கால தலைமுறையின் உணர்வுகளை மிகவும் சாமர்த்தியமாகக் கொடுத்திருக்கிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரண்டு இளமையான திறமைசாலிகள் அவர்களது கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

மம்முட்டியின் மகனின் நடிப்பைப் பார்ப்பது மகிழ்ச்சி. அவரோடு ஜோடியாக நடித்துள்ள இளம் பெண்ணும் மகத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளார் அமிதாப்பச்சன்.

உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் வாரத்தில் சுமார் 15 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்தின் முந்தைய படங்களின் தோல்வியை 'ஓ காதல் கண்மணி' யின் வெற்றி மறைத்துக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions