'ஓ காதல் கண்மணி'க்கு ரசிகர்கள் பாராட்டு!

Bookmark and Share

'ஓ காதல் கண்மணி'க்கு ரசிகர்கள் பாராட்டு!

ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனன் காம்போவின் கெமிஸ்டிரியை, டிரைலர்களில் பார்த்த ரசிகர்கள் இது மற்றுமொரு அலைபாயுதேவாகத்தான் இருக்கும் என்று கனவு கோட்டை கட்டினர்.இதனிடையே படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ரசிகர்களின் கமெண்டுகள், வெளிவர ஆரம்பித்துவிட்டன. பெரும்பாலான கமெண்டுகள், மணிரத்னம், தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே கூறுகின்றன.  

தற்காலத்து அப்பர்-மிடில் கிளாஸ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை படமாக்கியுள்ளதன் மூலம், இளைஞர் கூட்டத்தை தன்பக்கம் இழுத்துள்ளார் மணிரத்னம் என்கின்றனர் படம் பார்த்தோர்.

அதேநேரம், ஏ மற்றும் பி பிரிவு ஆடியன்சைதான் படம் குறி வைத்துள்ளது என்பதும் கருத்தாக உள்ளது. அது மணிரத்னத்தின் வழக்கமான பாணிதான் என்பதால் பாதகமில்லை.

படம் குறித்து, பாசிட்டிவ் ரிவியூக்கள் வர ஆரம்பித்துள்ளதாக, நடிகர் சூர்யா, நடிகை குஷ்பு போன்றோரும் தங்களது டிவிட்டர் தளத்தில் சிலாகித்துள்ளனர்.ரஹ்மானின் இசையில் வெளியான மெண்டல் மனதில் பாடல் ஏற்கனவே, பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது.

இந்நிலையில், பிசி ஸ்ரீராமுடன் மீண்டும் சேர்ந்துள்ள மணிரத்னம், இப்படத்தில், விஷுவல் கம் இசை ட்ரீட் வைத்துள்ளார். அதிலும், பறந்து செல்லவா பாடல் காட்சியில், ரஹ்மானுக்கும், ஸ்ரீராமுக்கும், யார் பெரியவர் என்ற போட்டியே நடந்துள்ளதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்.

முதல் பாதியைவிட இரண்டாம் பாதி மேலும் அருமையாக இருப்பதாக மவுத்-டாக்குகள் வந்தவண்ணம் உள்ளன. முதல் பாதியில் பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரிக்கு பறந்த பந்துகள், இரண்டாம் பாதியில், நடு பேட்டில் நச்சென்று பட்டு சிக்சர்களுக்கு பறக்கின்றனவாம்..ஃபார்முக்கு வந்த மணிரத்னம் என்ற பேட்ஸ்மேனிடமிருந்து..

 


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions