ஓகே கண்மணி: திருமணத்தை விரும்பாதவனின் காதல் கதை?

Bookmark and Share

ஓகே கண்மணி: திருமணத்தை விரும்பாதவனின் காதல் கதை?

மணிரத்தினத்தின் காதல் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அவர் இயக்கிய அலைபாயுதே, திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் வாழும் காதலர்களை பற்றியது.

இப்போது அவர் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணியும் அதுபோன்ற ஒரு புரட்சிகரமான காதல் கதை என்கிறார்கள். ஆதி (துல்கர் சல்மான்) தாராவை (நித்யா மேனன்) தீவிரமாக காதலிக்கிறார்.

அவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் துல்கருக்கு திருமண வாழ்க்கையில் உடன்பாடில்லை. திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் கடைசி வரை சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்து உடையவர்.

நித்யாமேனனும், அவரது குடும்பமும் திருமண சடங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள். இறுதியில் வெல்வது காதலா? கல்யாணமா என்பதுதான் கதை என்கிறார்கள். ஓ காதல் கண்மணியில் துல்கர் சல்மானுடன், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், கனிகா நடித்திருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மணிரத்தினத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இணையும் 12வது படம். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது, படம் ஏப்ரல் வெளியீடு.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions