அமெரிக்காவில் 70 தியேட்டர்களில் 'ஓகே கண்மணி'

Bookmark and Share

அமெரிக்காவில் 70 தியேட்டர்களில் 'ஓகே கண்மணி'

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு  இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பல திரையரங்குகளில் முன் பதிவுகளில் முதல் சில நாட்களுக்கு படம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் என்றாலும் 'கடல்' படத்தின் தோல்வியைப் பற்றி ரசிகர்கள் பெரிதாக நினைக்காமல் மணிரத்னத்தை வழக்கம் போல சிறந்த இயக்குனர் என்ற பார்வையில் பார்த்தே மீண்டும் திரையரங்குகளில் முன்பதிவு செய்கிறார்கள் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு அதிகமிருந்து வருகிறது. மணிரத்னம் படத்திற்கும் இந்த வரவேற்பு தற்போது கூடுதலாகவே உள்ளது என்கிறார்கள்.

முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் அளவிற்கு ஒரு இயக்குனரின் படத்திற்கு வரவேற்பு கிடைப்பதும் பெரிய விஷயம்தான் என்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறதாம். வார இறுதிக் காட்சிகள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions