ஹிந்திக்குப் போகும் 'ஓ காதல் கண்மணி'

Bookmark and Share

ஹிந்திக்குப் போகும் 'ஓ காதல் கண்மணி'

தமிழில் நேரடிப் படமாகவும், தெலுங்கில் டப்பிங் படமாகவும் வெளியான 'ஓ காதல் கண்மணி' படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் படமாக அமைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் மீண்டும் ஒரு ரசனையான படத்தைக் கொடுத்திருக்கிறார் என ரசிகர்களும் திரையுலகத்தினரும் பாராட்டி வருகிறார்கள்.

மணிரத்னத்திற்கும் ஹிந்தித் திரையுலகத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. அவர் ஹிந்தியிலும் நேரடிப் படங்களை இயக்கியிருக்கிறார், அவருடைய பல படங்களும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் இங்கு ஹிட்டாகி ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில ஹிந்தித் தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனவாம்.

இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் நிச்சயம் வெற்றி பெற்று வசூலை அள்ளி விடலாம் என்று அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது. தென்னிந்தியாவிலேயே இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்றால், வட இந்தியக் கலாச்சாரத்தில் இந்தப் படத்தின் கதையை நிச்சயம் வரவேற்பார்கள் என நினைக்கிறார்களாம்.

ரீமேக் ரைட்ஸிலேயே மேலும் ஒரு வசூலை மணிரத்னம் அள்ளுவார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions