ஓ காதல் கண்மணி டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

Bookmark and Share

ஓ காதல் கண்மணி டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

ராவணன், கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நி்த்யா மேனன் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம், மீண்டும் மணிரத்னத்துடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

மெளன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், கீதாஞ்சலி மற்றும் அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.ரோஜா முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும் 12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் டிரைலர், இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.சமூக வலைதளங்களில், ரசிகர்கள், இந்த டிரைலருக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். விரைவில், இந்த டிரைலர், தியேட்டர்களிலும் வெளியிடப்பட உள்ளது.


Post your comment





Related News
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions