மணிரத்னமும், தாலி சென்டிமென்ட்டும்...!

Bookmark and Share

மணிரத்னமும், தாலி சென்டிமென்ட்டும்...!

மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான காலத்திலிருந்தே அவர் இளம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் படத்தை இயக்குவார் என்ற ஒரு பெயர் இருக்கிறது. மிகவும் ஃபேஷனாகவும், மாடர்ன் ஆகவும் அவருடைய படமும், கதாபாத்திரங்களும் இருக்கும். ஆனால் மணிரத்னம் படங்களில் மிகவும் முக்கியமான 'தாலி சென்டிமென்ட்' என்பது அண்டர் கரண்ட்டில் இருக்கும் என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்.

மணிரத்னம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய 'ஓ காதல் கண்மணி' படம் வெளிவந்ததிலிருந்து அவரைப் பற்றியும், அவரது படங்களைப் பற்றியும் பலரும் விவாதம் செய்து வருகிறார்கள், பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அதில் பல சுவாரசியமான விஷயங்களும் அடங்கி வருகின்றன.

அப்படி நாம் கவனித்த போது கிடைத்த ஒரு சுவாரசியமான விஷயம்தான் கீழே உள்ள விஷயம். மணிரத்னம் அவருடைய படங்களில் தாலிக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுத்திருக்கிறார் என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதை ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டு பிடித்து எழுதியவது யார் என்றுதான் தெரியவில்லை.

“தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்திக் கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா

'ரத்னம் 'டா' ... 'மணிரத்னம்' டா” என்ற இந்த பதிவு பல பேரால் 'ஷேர்' செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பார்க்கும் போது ஒன்றே ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது, “என்னம்மா இப்படி யோசிக்கிறீங்களேம்மா....”.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions