ஓ காதல் கண்மணி படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

Bookmark and Share

ஓ காதல் கண்மணி படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை தொடர்ந்து தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோக்ரீன். கே.ஈ.ஞானவேல்ராஜாவின் நிர்வாகத்தில் இயங்கிய இந்த நிறுவனம் ஆரம்பத்தில் லாபம் ஈட்டியது.

பிறகு சில சறுக்கல்களை சந்தித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததே காரணம். சமீபகாலமாக  இந்நிறுவனம் வேறு நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிடும் தொழிலில் இறங்கி இருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் ரஜினி முருகன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது.

ரஜினி முருகன் மே மாதத்தில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையையும் வாங்கியுள்ளது -ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

ஓ காதல் கண்மணி ஏப்ரல் மாதத்தில் வெளிவருகிறது. ஆதியாக துல்கர் சல்மான், தாராவாக நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படத்தில் லிவிங் டு கெதர் என்கிற திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழும் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை மும்பையில் நடைபெறுகிறது.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions