ஓகே கண்மணி, ஓ காதல் கண்மணியானது!

Bookmark and Share

ஓகே கண்மணி, ஓ காதல் கண்மணியானது!

கடல் படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் படம் ஓகே கண்மணி. மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். மிக குறுகிய காலத்திற்குள் இந்தப்படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இப்படம் மௌனராகம், அலைபாயுதே மாதிரியான வித்தியாசமான காதல் கதையில் உருவாகி வருகிறதாம்.

முன்னதாக இப்படத்தின் தலைப்பையோ, ஸ்டில்லையோ மணிரத்னம் வெளியிடாமல் இருந்தார். ஆனால், மீடியாக்களில் மட்டும் படத்தின் தலைப்பு ஓகே கண்மணி என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் படத்தின் தலைப்பு ஓகே கண்மணி என்று தான் இருந்தது. ஆக மீடியாக்கள் கூறி வந்த தலைப்பு உண்மையானது.

ஆனால் இப்போது அந்த தலைப்பை மாற்றியுள்ளார் மணிரத்னம். இன்று(பிப்.,  24ம் தேதி) இப்படத்தில் இருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓகே கண்மணி என்று இருந்த தலைப்பை ஓ காதல் கண்மணி என்று மாற்றியுள்ளார்.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions