ஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாகுமா?

Bookmark and Share

ஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாகுமா?

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் படம் 'ஒ காதல் கண்மணி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தமிழகம் முழுக்க இப்படத்தை வெளியிட இருக்கிறது.  ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தநிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள்  'ஒ காதல் கண்மணி' படத்துக்கு  சிக்கலை ஏற்படுத்த உள்ளனர்.

கடல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை மணிரத்னம் தர வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். கடல் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுடன் மணிரத்னம் நேரடியாக வியாபாரம் செய்யவில்லை.

'கடல்' படத்தை ஜெமினி நிறுவனத்திடம் விற்றுவிட்டார் மணிரத்னம். ஜெமினி நிறுவனம்  தமிழகம் முழுவதும் மன்னன் பிலிம்ஸ் மூலமாக விநியோகம் செய்தது. 'கடல்' படம் தோல்வியைத் தழுவியது.

கடல் படம் வெளியான சில நாட்களில், மன்னன் பிலிம்ஸ் சார்பாக மணிரத்னம் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார்கள்.  சிலர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தற்போது, 'ஒ காதல் கண்மணி' வெளியாக இருக்கும் இந்த வேளையில், தென்னந்திய வர்த்தக கூட்டமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் கடல் பட நஷ்டத்தை மணிரத்னம் கொடுத்துவிட்டுத்தான் 'ஒ காதல் கண்மணி' படத்தை வெளியிட வேண்டும் என்று மன்னன் பிலிம்ஸ் சார்பாக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions