கண் பார்வை இல்லாதவராக நடிக்கும் விஷ்வா!

Bookmark and Share

கண் பார்வை இல்லாதவராக நடிக்கும் விஷ்வா!

விளையாடவா என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்வா. கேரம்போடு விளையாட்டை மையமாக வைத்து உருவான அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான் இயக்கியுள்ள ஒளிச்சித்திரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவர்.

இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விஷ்வா கூறும்போது, இந்த படத்தில் கிழக்கு வாசல், எஜமான், இதயம் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அப்துல் ரகுமானின் இயக்கத்தில் நடிக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப பெருமையான விசயம்.

அதோடு, வழக்கமான வேடமாக இல்லாமல் கண் பார்வை இல்லாத ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.  இந்த வேடத்தில் நடிப்பதற்கு முன்பு ராஜூ என்பவரிடம் ஒரு மாதம் பயிற்சி எடுத்தேன். பிஎஸ்ஸி படித்துள்ள அவரும் கண் பார்வை இல்லாதவர்தான்.

அவர் வீட்டுக்குள் எப்படி நடப்பார். வெளியில் போனால் எப்படி நடப்பார். யாராவது வீட்டுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வார். அவரது நடை உடை பேசுவது என எல்லா விசயங்களையும் ஒரு மாதம் அவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டேன்.

மேலும் இந்த வேடத்தில் நடிக்கும்போதுதான் பார்வை இல்லாதவர்களின் கஷ்டத்தை என்னால் உணர முடிந்தது. ஆனபோதும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது போலவே படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கண்பார்வை இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதே ஒரு வரம் என்று நான் டயலாக் பேசுவேன். அதற்கு இயக்குனர் சொல்லியிருக்கும் காரணம் அற்புதமாக இருக்கும்.

அதோடு, இந்த படத்தின் க்ளைமாக்சில் கண் பார்வை இல்லாத நான் வில்லனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது மிக வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். அதோடு எனது கேரியரிலும் இந்த ஒளிச்சித்திரம் முக்கியமான படமாக அமையும் என்கிறார் விஷ்வா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions