ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்

Bookmark and Share

ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்

ராணுவ வீரர்களை அவமதித்து கருத்து கூறிய நடிகர் ஓம் புரி மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய திரைப்படங்களில் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தனியார் சேனலில் விவாதம் நடைபெற்றது. இதில் பழம்பெரும் இந்தி நடிகர் ஓம் புரி கலந்து கொண்டு, ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் கூறும்போது, “ராணுவத்தில் சேருமாறு அவர்களை (ராணுவ வீரர்கள்) யார் நிர்ப்பந்தித்தது?. ஆயுதங்களை கையில் ஏந்துமாறு அவர்களிடம் யார் கேட்டது?. என்னுடைய தந்தையும் ராணுவத்தில் பணிபுரிந்தவர் தான். அவர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சல்மான்கானும் மற்ற ‘கான்’களும் கூறியதை குற்றம் என்று நான் கண்டிக்க விரும்பவில்லை. நேராக பிரதமர் மோடியிடம் சென்று அவர்களது (பாகிஸ்தான் நடிகர்கள்) ‘விசா’வை ரத்து செய்யுமாறு கோரிக்கை வையுங்கள். 15-20 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை தயார் செய்து பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள்” என்றார்.

65 வயது நடிகர் ஓம் புரியின் இந்த கருத்துக்கு அந்தேரியை சேர்ந்த பொதுநல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அவர் மீது தேசவிரோத குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி, உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளது.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions