பிரபல விநியோகிஸ்தரிடம் தங்க சங்கிலி பரிசு பெற்ற ஓநாய்கள் ஜாக்கிரதை பட இயக்குனர்.!

Bookmark and Share

பிரபல விநியோகிஸ்தரிடம் தங்க சங்கிலி பரிசு பெற்ற ஓநாய்கள் ஜாக்கிரதை பட இயக்குனர்.!

இயக்குனர் ஜே.பி ஆர் இயக்கத்தில் எஸ் பயாஸ்கோப் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் குழந்தைகள் கடத்தலை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ஓநாய்கள் ஜாக்கிரதை. இந்த படத்தில் விஸ்வந்த், ரித்விகா, ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜனவரி 5-ல் வெளியாக உள்ள இந்த படத்தின் வெளியிடும் உரிமையை கரிஷ்மா இன்போடைன்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தை பார்த்த விநியோகிஸ்தர் படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் ஜே.பி ஆர்-க்கு தங்க சங்கிலி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த படத்திற்கு அதீஸ் உத்ரியன் இசையமைக்க மகேஷ் மற்றும் கே.தேவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions