ஊர்வசியின் மார்க்கெட் சூடு பிடிக்கிறது!

Bookmark and Share

ஊர்வசியின் மார்க்கெட் சூடு பிடிக்கிறது!

முந்தானை முடிச்சி ஊர்வசிக்கு கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ரூட்டை மாற்றினார். ஆனால், அந்த சமயத்தில் முதல் கணவரான மனோஜ் கே. ஜெயனை விவாகாரத்து செய்தது, 2013ல் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டது போன்ற குடும்ப பிரச்னைகளால் அவர் அதிகமான படங்களில் ஒப்பந்தமாகவில்லை.

ஆனால், தற்போது முழுவீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலின் அம்மாவாக நடித்திருந்த ஊர்வசி, அடுத்து மாப்பிள்ளை விநாயகர், சவாலே சமாளி, உத்தமவில்லன் என சில படங்களில் நடித்துள்ளார்.

இதில் கமலின் உத்தமவில்லன் படத்தில் ஊர்வசிக்கு வித்தியாசமான வேடமாம். அந்த வேடத்தில் அவர் மட்டுமே நடிக்க முடியும் என்று அவரையே நடிக்க வைத்திருக்கிறார் கமல்.

அதோடு அவர் நடித்த ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து டோட்டல் யூனிட்டே கைதட்டி ரசித்திருக்கிறது. அதனால் மீண்டும் கோடம்பாக்கத்தில் ஊர்வசியைப்பற்றி பரவலாக பேசத் தொடங்கி விட்டனர்.

செண்டிமென்ட் மட்டுமின்றி காமெடியும் கலந்து நடிக்கக்கூடிய அம்மா நடிகை கிடைத்து விட்டதால், ஊர்வசி பக்கம் புதிய படங்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டன. விளைவு, மார்க்கெட்டில் இருக்கும் சரண்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட சில அம்மாக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
குடிபோதையில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு ஊர்வசி செய்த அட்டூழியங்கள்!
கே.பாக்யராஜை வாத்தியார் என்றழைக்கும் ஊர்வசி!
ஊர்வசியை அமெரிக்க ராப் பாடகருக்கு விற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்..!
பல நடிகைகளுடன் \'உத்தம வில்லன்\' படத்தில் களமிறங்கும் கமல்..!
பதினெட்டு காமெடியர்களுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் - கோப்பெருந்தேவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions