ஊட்டியில் 1–ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை

Bookmark and Share

ஊட்டியில் 1–ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை

ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது.


தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வறுத்தெடுக்கிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு பரீட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கப்படும்.


அதன் பின்னர் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காக வருகிற 1–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களில் வருவோர் அதனை நிறுத்த வேண்டிய இடங்களில் மட்டும் நிறுத்த வேண்டும். ஆங்காங்கே நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.

‘குளு குளு’ சீசனுக்காக சுற்றுலா பயணிகளை வரவேற்க இப்போதே தயாராகி விட்டது.

 


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மம்முட்டியின் முக்கியமான படம் !
மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக மம்முட்டி தேர்வு
மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ மம்முட்டி..?
நோயால் அவதிப்படும் முன்னாள் இயக்குனருக்கு மம்முட்டி உதவி..!
மலையாள நடிகர் சங்கத் தேர்தல்: மம்முட்டி பொதுச் செயலாளராக தேர்வு
மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி படம்
மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?
மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions