இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக அவதிபட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள 'செவன் ஹில்ஸ்' ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் வயிற்றில் அறுவை சிகிச்ரை செய்தார்கள் ஆபரேஷனுக்கு பின் குணமடைந்தார்.
இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட் டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் வயிற்றில் ஆபரேஷன் செய்த இடத்தில் அமிதாப்பச்சனுக்கு மீண்டும் திடீரென வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யும் முடிவை டாக்டர்கள் கை விட்டனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடல்நிலையில் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
Post your comment




