தலைமை செயலாளரா சகாயத்தை நியமிக்கணும்….! அதிரடி தொடரணும்..!! ஓபிஎஸ்சிடம் ஒத்த காலுல நிற்கும் விஜயகாந்த்…!?

Bookmark and Share

தலைமை செயலாளரா சகாயத்தை நியமிக்கணும்….! அதிரடி தொடரணும்..!! ஓபிஎஸ்சிடம் ஒத்த காலுல நிற்கும் விஜயகாந்த்…!?

திமுக-அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பது விஜயகாந்த் தலைமையில் உள்ள தேமுதிக. இதன் நிறுவன தலைவா் விஜயகாந்த் ஊழல் அற்ற ஆட்சி அமைப்பதையே மிகவும் விரும்புகிறார்.

இதனை குறித்து அவா் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் அவா் கூறியிருப்பதாவது.

புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு தமிழ்நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும் திரு.சகாயம் அவர்களை நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழக அரசு, தைரியமிக்க நேர்மையான திரு.சகாயம் அவர்களை நியமித்தால், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தவறு செய்வதை தட்டிக்கேட்பார்.

இந்த காரணத்தினால் தான் இவரை நியமிக்கவில்லை என்று மக்களும் பேசிக்கொள்கிறார்கள். தமிழக அரசு நியமித்து இருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்திற்கு புதிய தலைமைச் செயலாளராக திருமதி.கிரிஜாவைத்தியநாதன் அவர்களை நியமித்து, நிர்வாக சீர்திருத்தம் பொறுப்பு, ஊழல் கண்காணிப்பு பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

30 ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியராக பல துறையில் பணியாற்றியவர். புதியதாக தலைமை செயலாளராக பதவிஏற்ற பிறகு,  அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் துணை போகாமல் நேர்மையாக நிர்வாகத்தை வழிநடத்த வேண்டும்.

சேகர்ரெட்டி, ராம்மோகன்ராவ், வீட்டிலும், அலுவலகத்திலும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியிலும் வருமான வரி சோதனை செய்ததுபோல், தமிழகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions