ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளிக்ககோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடுகள் முற்றுகை.. இளைஞர்கள் அதிரடி

Bookmark and Share

ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளிக்ககோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடுகள் முற்றுகை.. இளைஞர்கள் அதிரடி

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை மிரட்டி ராஜினாமா கடிதம்  பெறப்பட்டது என்று பன்னீர் செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்திற்கும் இடையே நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு 130 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பன்னீர் செல்வத்திற்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதில் 3 பேர் சசிகலா பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள்.

இந்த நிலையில் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதேபோல தமிழக இளைஞர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் வீடுகளை இளைஞர்கள் முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions