ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை இதுதான்

Bookmark and Share

ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை இதுதான்

விஜய் சேதுபதி தற்போது தயாரித்து, நடித்து வரும் படம் ஆரஞ்சு மிட்டாய். அவருடன் ரமேஷ் திலக், அஷ்ரிதா நடிக்கிறார்கள். பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ஜஸ்டின் பிரகாகரன் இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான கதை.

புதுமைகளை தேடிச் செல்லும் விஜய் சேதுபதி இதில் 55 வயது முதியவராக நடிக்கிறார். ஒரு மனிதன் தடுமாறும் வயது 18 மற்றும் 55. 18 வயதில்தான் படிப்பின் முக்கியத்தும், காதல் எல்லாம் வந்து சேரும் என்ன படிப்பது நம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்று முடிவெடுப்பது 18 வயதில் அந்த வயதில் என்ன முடிவெடுக்கிறானோ அதுதான் வாழ்க்கை.

அடுத்த வயது 55. குடும்பத்துக்காக உழைத்து ஓடாக தேய்ந்து நிற்கிற வயது. முதுமைக்கும், இளமைக்குமான தடுமாற்ற வயது. இனி நமக்கென்னு என்ன இருக்கிறது. இனி எதை நோக்கி ஓட வேண்டும் தீர்மானிக்க தடுமாறிக்கொண்டிருக்கிற வயது.

இதில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிற போது ஈகோ, குமுறல், கோபம் எல்லாமே வரும். அப்படிப்பட்ட ஒரு வயதினராக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

கேரக்டரின் பெயர் கைலாசம். பல நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் கைலாசத்துக்கு ஒரு நாள் மாரடைப்பு வருகிறது. கிராமத்திலிருந்து நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வருகிறது.

அந்த ஆம்புலன்சில் ஒரு டிரைவரும் ஒரு கம்பவுண்டரும் இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் நகருக்கு சென்று சேரும் வரையிலான இவர்கள் மூவரின் உரையாடல்களின் வழியாக ஒரு வலியான வாழ்க்கையை சொல்லும் கதை. கம்புவுண்டராக ரமேஷ் திலக் நடித்துள்ளார்.

48 மணி நேரத்தில் நடக்கும் கதை. மரணம் வரையில் கடைசி வரை சிங்கமாக சிலர் கர்ஜித்தே வாழ்வார்கள். அப்படிப்பட்ட ஒரு கிழ சிங்கத்தின் கதைதான் ஆரஞ்சு மிட்டாய்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி செய்வது நியாயமா?
தாமதமாகும் விஜய்சேதுபதி படங்கள்...!
பஞ்சுமிட்டாய் - ஒரு முழுமையான விஜய் படம்
ஆரஞ்சு மிட்டாய் படத்துக்காக பின்னணி பாடுகிறார் விஜயசேதுபதி!
24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்! ஆரஞ்சு மிட்டாய் சாதனை!
ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லர் - விஜய் சேதுபதியை நினைத்து பெருமைப்படும் தனுஷ்
விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
டிசம்பரில் திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்
விஜய் சேதுபதி படத்தை இயக்கும் உலகப் புகழ்பெற்ற இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions