ஒரு மெல்லிய கோடு படத்தில் படப்பிடிப்பு முடிந்தது

Bookmark and Share

ஒரு மெல்லிய கோடு படத்தில் படப்பிடிப்பு முடிந்தது

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் படம் ஒரு மெல்லியகோடு. இப்படத்தில் அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷாபட் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 

வெளிநாட்டில் நடந்த பாடல் படப்பிடிப்புடன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் “பல முக்கிய பிரமுகர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவருவதே இல்லை. பல காரணங்களாக அவை திரித்து கூறப்படுகிறது. அல்லது மறைக்கப்படுகிறது. 

அப்படி மறைக்கப்பட்ட ஒரு முக்கிய பிரமுகரின் கொலையை தடயவியல் நிபுணர் அர்ஜுன் கண்டுபிடிக்கும் கதை. கொலையாகும் முக்கிய பிரமுகராக மனிஷா கொய்ராலா நடிக்கிறார்.

அவரது கணவராக ஷாம் நடிக்கிறார். எனது முந்தைய படங்களான குப்பி, ராஜீவ் கொலையாளிகள் சிவராதன் சுபா பற்றியது. வனயுத்தம் வீரப்பன் பற்றியது. இதுவும் அதுபோன்ற ஒரு உண்மை சம்பவம். அது என்ன என்பதை கூற இயலாது. படம் பார்க்கும்போது தெரியும்” இவ்வாறு ரமேஷ் அப்படத்தை பற்றி கூறினார்


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions