ஒரு மெல்லிய கோடு படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

ஒரு மெல்லிய கோடு படப்பிடிப்பு தொடங்கியது

குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் அடுத்து இயக்கும் படத்திற்கு ஒரு மெல்லிய கோடு என்று டைட்டில் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த அஜீத் நடித்த, 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் புகழ்பெற்ற வரி இது. இதில் அர்ஜுன், ஷாம் நடிக்கிறார்கள், மனீஷா கொய்ராலா, பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இளையராஜா இசை அமைக்கிறார். அக்ஷயா கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் மற்றும் ரூபா தேஷ்ராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு இன்று (ஜன 19) காலை பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் இளையராஜா, அர்ஜுன், ஷாம் மற்றும் கன்னட, தமிழ் திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

"இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் வார்த்தை ஒரு மெல்லிய கோடு. ஒரு சரிக்கும், தவறுக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். கோட்டை தாண்டாமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் தாண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

அப்படிப்பட்ட கதை இது. ஒரு கொடூரமான நிகழ்வு ஒன்று நடக்கிறது. அந்த நிகழ்வுக்கு முன்பும், பின்புமான விஷயங்களை அலசும் திரைக்கதை. கன்னடத்தில் கேம் என்று டைட்டில் வைத்திருக்கிறோம்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழ் பதிப்புக்கு சென்னையிலும், கன்னட பதிப்பிற்கு பெங்களூருவிலும் படப்பிடிப்பு நடக்கிறது" என்றார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions