விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!

Bookmark and Share

விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள்.

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , '7 C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர்.

வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான 'Ramnad Rhinos' அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த 'Ramnad Rhinos' அணியின் கேப்டன் விஜய் சேதுபதி ஆவார். இந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவில்தான் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா,மாபெரும் நட்சத்திர பட்டாளம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

 இந்த படத்தில் காயத்ரி மற்றும் நிஹாரிகா கோனிடேலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.



Post your comment





Related News
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions