ஆமை வேகத்தில் வளரும் ஒரு பக்க கதை

Bookmark and Share

ஆமை வேகத்தில் வளரும் ஒரு பக்க கதை

விஜய்சேதுபதி நடித்த  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்  படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அந்தப் படம் வெளியாகி சில வருடங்கள் ஆனநிலையிலும் பாலாஜி தரணீதரன் பற்றி ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இரண்டாவது படத்தின் கதையை தயார் செய்து வருவதாக சொன்னார்கள்.

பிறகு, ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்க இருப்பதாக பிரஸ்மீட்டில் சொன்னார். தற்போது அவர் இயக்கி வரும்  ஒரு பக்க கதை  படத்தில்  மலையாள நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.  

இவர் நடிகர் ஜெயராமின் மகன்.  மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள காளிதாஸ்  தேசியவிருது பெற்றவர். அவருக்கு தேசிய விருது கிடைத்த மலையாளப்படம் தமிழில் கண்ணாடிபூக்கள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்த காளிதாஸ் ஒரு பக்க கதை படத்திள் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவரை மீடியாவுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு காளிதாஸை வாழ்த்தினார்.

ஒரு பக்க கதை படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த மேகா என்ற மாடல் அழகி நடித்து வருகிறார்.  விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள மேகா, சென்னை சில்க்ஸ், ஜி.ஆர்.டி., ஜாய் ஆலுக்காஸ் உட்பட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.  பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ள மேகா,  ஒரு பக்க கதை  படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இரண்டு புதுமுகங்கள் நடிப்பதாலோ என்னவோ ஒரு பக்க கதை ஆமை வேகத்தில் வளர்ந்து வருகிறது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions