ஒரே செட்டில் படமாகும் ஒரு பக்க கதை!

Bookmark and Share

ஒரே செட்டில் படமாகும் ஒரு பக்க கதை!

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அதையடுத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது சாதகமாக சூழ்நிலை ஏற்படவில்லை.

அதனால் அந்த படத்தை அப்படியே விட்டு விட்டு, தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப்போலவே இந்த ஒரு பக்க கதையும் ஒரு பக்காவான கதையில் உருவாகிறதாம்.

அதோடு, பெரிய அளவில் செலவு இல்லையாம். ஒரே இடத்தைச்சுற்றி நடக்கும் கதை என்பதால், சென்னையிலுள்ள அடையாறில் இந்த படத்துக்காக காலனி போன்று ஒரு செட்டை அமைத்து ஆரம்பத்தில் இருந்தே படமாக்கி வருகிறார்கள்.

மேலும், பெரிய நடிகர்கள் என்ற யாரும் இல்லாததால் அப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே ஸ்பாட்டில் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்களாம். அதனால் இதுவரை 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ள பாலாஜி தரணீதரன், பாதி படப்பிடிப்பை முடித்து விட்டாராம்.

பிப்ரவரி 20ந்தேதி வரை அந்த செட்டில்தான் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதையடுத்து, பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற சிலர் சொன்னபோது, அதெல்லாம் தேவையில்லை.

அதைகூட சென்னையை சுற்றியே படமாக்கிக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் பட்ஜெட்டை சுருக்கிக்கொண்டாராம் இயக்குனர். 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions