ஒரு தோழன் ஒரு தோழி- தள்ளிப்போன நல்ல படம்!

Bookmark and Share

ஒரு தோழன் ஒரு தோழி- தள்ளிப்போன நல்ல படம்!

மிருகம் ஆதியின் நடிப்பில், ஆதியின் அண்ணன் இயக்கியிருக்கும் யாகவாராயினும் நாகாக்க, கருணாஸ் கதாநாயகனாக நடித்து, ரஜனீஷ் இயக்கியுள்ள- லொடுக்கு பாண்டி, விமல், புன்னகைப்பூ கீதா ஜோடியாக நடித்துள்ள காவல், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்துள்ள இன்று நேற்று நாளை, பெ.மோகன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள - ஒரு தோழன் ஒரு தோழி, கோபு பாலாஜி இயக்கத்தில் சாரதி, அன்சிபா நடித்துள்ள - பரஞ்சோதி, எஸ்.பி.சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கியுள்ள - மூணே மூணு வார்த்தை ஆகிய ஏழு படங்கள் இன்று திரைக்கு வருவதாக சொல்லப்பட்டது.

இவற்றில் கடைசி நேரத்தில் ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்சோதி ஆகிய இரண்டு படங்களும் வெளிவரவில்லை. அடுத்த வாரத்துக்கு ஒரு படமும், அடுத்த மாதம் கடைசிவாரத்துக்கு ஒரு படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

படம் வெளியாகும் அன்றுதான் பத்திரிகையாளர்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்ட வேண்டும் என்று முன்னணி தயாரிப்பாளர்கள் பயப்படுகின்றனர். ஆனால், புதிய தயாரிப்பாளர்கள் தயாரித்த ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்சோதி படங்களை கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளிலேயே பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக்காட்டினார்கள்.

உண்மையில் இந்த வாரம் வெளிவரும் ஐந்து படங்களைவிட ஒரு தோழன் ஒரு தோழி மிகச் சிறப்பாகவே எடுக்கப்பட்டிருந்தது.

சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு தோழன் ஒரு தோழி படம் இன்றைய சமூகப்பிரச்சனை ஒன்றைப் பற்றி பொட்டில் அடித்தது போல் பேசி இருக்கிறது என்ன பிரயோஜனம்.. நல்ல படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையே...!


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions