மக்களிடையே குறைந்த ஆஸ்கர் மோகம்

Bookmark and Share

மக்களிடையே குறைந்த ஆஸ்கர் மோகம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 23ம் தேதி நடைபெற்ற 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் கோலாகல நிகழ்ச்சியினை, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, குறைவான பார்வையாளர்களே பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் மிக உயரிய விருது என்று சொல்வதை விட, பெரிதும் மதிக்கப்படும் விருது என்பதனடிப்படையிலேயே, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை, உலகெங்குமிலும் உள்ள மக்கள் பார்த்து வருகின்றனர்.

87 வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை பார்த்தவர்களின் எண்ணிக்கை குறித்து டெட்லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியினை, 18 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள், 36.6 மில்லியன் மக்களே பார்த்துள்ளனர்.

கடந்தாண்டு நடைபெற்ற 86வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியினை 18 முதல் 49 வயதிற்குட்டவர்கள் 43 மில்லியன் மக்கள் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது, 10.8 சதவீதம் குறைவு என்பதோடு மட்டுமல்லாது, கடந்த 6 ஆண்டுகளில், இதுவே குறைந்தபட்ச அளவு ஆகும்.

2008ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை, 32 மில்லியன் மக்கள் மட்டுமே பார்த்திருந்தனர்.  இதுவே, இதுவரை, குறைந்த மக்கள் பார்த்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியாக உள்ளது.


Post your comment





Related News
ஆஸ்கார் விருதை திருப்பி கொடுத்த டிகாப்ரியோ
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ!
87வது ஆஸ்கர் விருதுகள்! - பேர்ட்மேன், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படங்களுக்கு 4 விருதுகள்!
அமெரிக்காவில் ஆஸ்கர் விருதுகள் கோலாகல நிகழ்ச்சி
ஆசைப்பட்டது நோபல்; கிடைத்ததோ ஆஸ்கர்! - ரசூல் பூக்குட்டி!
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்திப் படம்.
அமெரிக்காவின் ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படக்கூடாது நடிகர் நாசர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions