புலி யூனிட்டை கலகலப்பாக்கி வந்த தம்பி ராமைய்யா!

Bookmark and Share

புலி யூனிட்டை கலகலப்பாக்கி வந்த தம்பி ராமைய்யா!

கடந்த ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்திருக்கிறார் தம்பி ராமைய்யா. இந்த ஆண்டும் அவர் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் இருக்கிறது. அதோடு அத்தனை படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் குணசித்திர வேடங்களாக இருந்தாலும், அந்த கேரக்டர்களில் அவ்வப்போது காமெடி நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார் தம்பி ராமைய்யா.

மேலும், அவரைப்பொறுத்தவரை சிறந்த குணசித்திர நடிகர் என்பதற்காக மைனா படத்தில் தேசிய விருது பெற்றபோதும், தான் நடிக்கும் கேரக்டர்களில் காமெடியே தூக்கலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

அதனால்தான் டைரக்டர்கள் குணசித்திர கேரக்டருக்கு அவரை புக் பண்ணினாலும், தானும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து சில காட்சிகளில் காமெடியையும் சேர்த்துக்கொண்டு நடிக்கிறாராம் தம்பி ராமைய்யா.

அதோடு, அவருக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்பதால், படப்பிடிப்பு தளங்களில் தான் இருக்கும் இடத்தையும் கலகலப்பாகவே வைத்திருக்கும் தம்பி ராமைய்யா, புலி படத்தில் நடித்தபோது யூனிட் நபர்கள் முன்னிலையில் அவ்வப்போது காமெடி சரவெடிகளை கொளுத்திப்போட்டு சிரிக்க வைத்துக்கொண்டேயிருந்தாராம். அதனால் கொஞ்சம் போரடித்தாலும் தம்பி ராமைய்யா இருக்கும் இடத்தை தேடிச்சென்று கொண்டிருந்தார்களாம் சக நடிகர் நடிகைகள்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions