சம்பளத்தை குறைத்த ஓவியா!

Bookmark and Share

சம்பளத்தை குறைத்த ஓவியா!

களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, கலகலப்பு படத்திற்கு பிறகு பக்கா கமர்சியல் நாயகியாகவும் உருவெடுத்தார். அதன்பிறகு மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே என சில படங்களில் நடித்தவருக்கு பின்னர் படமே இல்லை.

அதனால் ஒரு இந்தி படத்தில் நடிக்கச்சென்றார். ஆனால் அடுத்தபடியாக அங்கேயும் படமில்லை. மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி வந்தவருக்கு த்ரிஷா நடிக்கும் போகி படத்தில் ஒரு வேடம் கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் பூனம் பாஜ்வாவும் நடிக்கிறார்.

ஆக, த்ரிஷா லீடு ரோலில் நடிக்க, பூனம்பாஜ்வா, ஒவியா இருவரும் அவரது தோழிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாக வேண்டும் என்று நினைக்கும் ஓவியா, மதயானைக்கூட்டம் படத்தில் நடித்து வந்தபோது 20 லட்சம் வரை சம்பளம் கேட்டவர், இப்போது 10 லட்சம் கொடுத்தாலும் நடிக்கிறேன் என்கிறாராம்.

ஆனால் அப்படி தான் நடிக்கும் படத்தில் ஹீரோ பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் களிடம் கூறி வருகிறார் ஓவியா.

 


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions