புதுமுக நாயகர்களுக்கு கை கொடுக்கும் ஒவியா!

Bookmark and Share

புதுமுக நாயகர்களுக்கு கை கொடுக்கும் ஒவியா!

எல்லா நடிககைளும் வளர்ந்தபின் பிரபலமாகிவிட்டால் புதுமுக நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடிப்பதில்லை. ஆனால் இவர்களில் விதிவிலக்கு ஓவியா எனலாம். பல புதுமுக நடிகர்களுடன் பெருந்தன்மையாக ஜோடி சேர்ந்து நடித்து அவர்களை உயர்த்த உதவுகிறார்.

மலையாளத்தில் 3 படங்கள் நடித்த நிலையில் தமிழில்  களவாணியில் புதுமுக விமலுடன் ஜோடியாக நடித்தார். மெரினாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். இன்று அவர் வளர்ந்து எங்கோ சென்று விட்டார்.

முத்துக்கு முத்தாக  படத்தில் ஹரீஷுடன் நடித்தவர், கலகலப்பு  படத்தில் சிவாவுடன் ஜோடியானார். மூடர் கூடம்  படத்தில் நவீனுடன் ,மதயானைக் கூட்டத்தில் கதிருடன் என்று புதிய வளரும் நாயகர்களுடன் நடித்துள்ளார்.

அந்த வகையில் ஓவியா பல இளம் கதாநாயகர்களுக்கு கை கொடுத்து உயர்த்திவிடும் ஆபத் பாந்தவியாக இருக்கிறார் என்றே கூற வேண்டும். இளம் ஹீரோக்களுக்கு கை கொடுக்கும் ஓவியா என்று  சீனி பட விழாவின் மேடையிலேயே இவரைப் புகழ்ந்தார்கள் என்றால் பாருங்களேன்..


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions