ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!

Bookmark and Share

ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் ஓவியா. முதல் முதலாக ஒரு நடிகைக்கான ஆர்மி தொடங்கப்பட்டதும் ஓவியாவிற்கு தான் என்பது நான் அனைவரும் அறிந்ததே.

இதனையடுத்து ஓவியா சில பிரச்சனைகளால் மனமுடைந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், ரசிகர்களையும் சந்தித்து வந்தார். இதனையடுத்து ஒரு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிவடைந்தவுடன் லைவ் சேட் செய்வதாக கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை ஓவியா அதை செய்யவில்லை. இந்நிலையில் தற்போது அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் இன்று இரவு பேஸ்புக்கில் லைவ் சேட் செய்வதாக கூறியுள்ளார்.

 இதனை பார்த்த ஓவியா ஆர்மியினர் ஹரிஷ் கூட லைவ் சேட் வராரு, தலைவி ஓவியா நீங்க எப்போ தான் லைவ் சேட் செய்வீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions