அது ஓவியாவுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் - ஆரவ் ஓபன் டாக்.!

Bookmark and Share

அது ஓவியாவுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் - ஆரவ் ஓபன் டாக்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வந்தவர்கள் ஓவியாவும், ஆரவ்வும். இதனால் ஓவியாவுடன் சேர்ந்து ஆரவ்விற்கும் மக்களிடம் ஆதரவு கிடைத்தது.

பின்னர் ஓவியாவின் நட்பு காதலாக மாற அதை ஆரவ் மறுத்து விட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார் ஓவியா. இதனால் ஓவியா ஆர்மியினர் ஆரவ் மீது செம கடுப்பில் இருந்தனர், அதுமட்டுமில்லாமல் அவரை விரைவில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அவை அனைத்தையும் தாண்டி ஆரவ் 100 நாட்களை வெற்றிகரமாக கழித்து பரிசையும் தட்டி சென்றார். தற்போது வெளியேறிய ஆரவ் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவுடன் எப்போதும் நட்புடன் இருக்க நான் தயார். அவருக்கு ஓகே என்றால் அவருடன் இணைந்து நடிக்கவும் தயார் எனவும் கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions