மஞ்சப்பை கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஓவியா..!

Bookmark and Share

மஞ்சப்பை கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஓவியா..!

ஓவியாவுக்கு இந்தவருடம் சந்தோஷமாகத்தான் துவங்கியுள்ளது என்று தாராளமாக சொல்லலாம். காரணம் கடந்த வாரம் சரத்குமாருடன் ஓவியா நடித்த சண்டமாருதம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஓவியா நடித்துள்ள 'மிஸ்டர் மொம்மகா' என்கிற கன்னடப்படம் வரும் மார்ச்-6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கன்னடத்தில் ஏற்கனவே 'கிராதகா' என்கிற படத்தில் நடித்துள்ள ஓவியா இரண்டாவதாக நடிக்கும் இந்தப்படம், தமிழில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற 'மஞ்சப்பை' யின் ரீமேக் தான்.

தமிழில் ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ராகவன். இந்தப்படம் ரிலீஸான அன்றே கிட்டத்தட்ட 'கோச்சடையான்' படம் ரிலீஸான அன்று எவ்வளவு வசூலித்ததோ அதில் 70 சதவீதத்தை தொட்டு வினியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதுமட்டுமல்ல தெலுங்கிலும் ரீமேக்காகி ஹிட்டானது. தற்போது கன்னடத்தில் பேரனாக 'பருவராகம்' ரவிச்சந்திரனும் தாத்தாவாக ரங்காயனா ரகுவும் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions