ஓவியாவின் கோபம்!

Bookmark and Share

ஓவியாவின் கோபம்!

களவாணி ஓவியா தற்போது சண்டமாருதம், சீனிகாம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சண்டமாருதம் படத்தில் சரத்குமாருடன் அவர் மட்டுமின்றி மீரா நந்தனும் நடிக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் மீராநந்தன்தான் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். ஓவியா ஒரு கிளாமர் ரோலில்தான் நடிக்கிறாராம். இதனால் அந்த படத்தில் பணியாற்றுபவர்கள், மற்றவர்களிடம் கூறுகையில், இந்த படத்தில் மீராநந்தன்தான் ஹீரோயினி. ஓவியா ஒரு அயிட்டம் ரோலில்தான் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இந்த விசயம் ஓவியாவின் காதுக்கு செல்லும்போது செம டென்சனாகி விடுகிறாராம். உடனே சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, இந்த படத்தில் மீராநந்தன் மட்டுமல்ல நானும் ஒரு ஹீரோயினிதான்.

அவர் நடிப்பது ஹோம்லி ரோல். நான் நடிப்பது கிளாமர் ரோல். அந்த வகையில் நானும் இன்னொரு ஹீரோயினிதான். அதனால் கதையைப்பற்றிய விவரம் தெரியாமல் வெளியில் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று கோபத்தை காட்டுகிறாராம்.

மேலும், இப்படியொரு செய்தி பரவியதில் இருந்து அதுவரை மீராநந்தனுடன் படப்பிடிபபு தளத்தில் ஜாலியாக பேசி வந்த ஓவியா, பின்னர் அவரை எதிரி போன்று பார்த்ததோடு, அவரை கண்டாலே முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு நடந்ததாக அப்படக்குழுவினர் கூறுகின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions