இசைக்குயில் பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தும் ரெயின்ட்ராப் சமூக அமைப்பு

Bookmark and Share

இசைக்குயில் பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தும் ரெயின்ட்ராப் சமூக அமைப்பு

தென்னிந்திய மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த இசைக்குயில் பி.சுசீலாவுக்கு ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு பாராட்டு விழா நடத்துக்கிறது.

மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்நிறுவனம், வரும் மே 9 - அன்னையர் தினத்தன்று இந்த பாராட்டு விழாவை நடத்துகிறது.

இந்த அமைப்பின் தூதராக உள்ள ஏ.ஆர். ரகுமான், பாராட்டு விழாவிற்கு தலைமை தாங்குகிறார். சென்னை அம்பத்தூரில் உள்ள மூத்த குடிமக்களுக்கான ஆனந்தம் இல்லத்தில் இப்பாராட்டு விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த முதியோர் இல்லத்தில் தான் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு, அன்னையர் தின விழாவை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்த அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாட ரெயின்ட்ராப்ஸ் முடிவு செய்துள்ளது. அன்றைய தினத்தில் ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதில் பி.சுசீலா பாடிய பாடல்களை முன்னணி பாடகர்கள் பாட உள்ளனர்.

இளமை காலத்தில் கேட்டு, ரசித்து, ஆனந்தமடைந்த பாடல்களை பாடியவரான இசைக்குயில் சுசீலாவை சந்தித்து, தங்களின் இளமைக்கால நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்பார்க்கும் வாய்ப்பு ஆனந்தம் இல்ல முதியோர்களுக்கு கிடைத்துள்ளது.

இவ்விழாவில் பல்வேறு முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர் என்று ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நிறுவனரான அரவிந்த் ஜெயபால் கூறியுள்ளார். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions