இந்த “காதல்” இந்த சமூகத்தை சும்மா விடாது – இயக்குனர் பா .ரஞ்சித்

Bookmark and Share

இந்த “காதல்” இந்த சமூகத்தை சும்மா விடாது – இயக்குனர் பா .ரஞ்சித்

பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கிறது , கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கிறது கிராமங்களில் வாழும் மக்கள் , எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது .

முதன் முதலாக வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்க கூடிய அரசியல் , அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன் ,

அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது , யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது , அந்தக்கேள்விக்கு இந்தப்படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .

இந்தப்படத்தில் வரும் டிரெயிலரும் , பாடல்களும் அதை தான் திருப்பி திருப்பி சொல்ல வருகிறது . இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது .
“மாவீரன் கிட்டு ” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும் .”காதல்” இந்த சமூகத்தை மாற்றியே தீரும் .சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டுபண்ண முடியும் . என்கிற நம்பிக்கையை உண்டு .


அந்த வகையில் சுசீந்திரன் , யுகபாரதி , இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

இந்தமாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றால் மட்டுமே இந்தமாதிரியான படங்கள் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும் . தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன்வருவார்கள் , தமிழ் ரசிகர்கள் எந்தப்படத்தையும் தரம்பிரித்து பார்ப்பதில்லை , இந்தப்படம் கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றார்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions