தரமான படங்களை ரசிகர்கள் கைவிட்டதில்லை!- அட்டகத்தி ரஞ்சித்

Bookmark and Share

தரமான படங்களை ரசிகர்கள் கைவிட்டதில்லை!- அட்டகத்தி ரஞ்சித்

தினேஷ்-நந்திதா நடித்த அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அந்த படத்தின் மெகா ஹிட் அவரை கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்க வைத்தது. முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும் சூப்பர் ஹிட்டானதால் இப்போது ரஞ்சித்தும் கோலிவுட் ஹீரோக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார்.

இந்த நிலையில், சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கும் விசிட் அடிக்கும் ரஞ்சித், அப்போது அப்படங்களின் இயக்குனர்களை வாழ்த்தி பேசும்போது, சினிமாவைப்பற்றியும், சினிமா ரசிகர்களைப்பற்றியும் தனது கருத்தினை எடுத்து வைக்கிறார்.  

அப்படி அவர் கூறுகையில், முதலில் டைரக்டர்கள் படமாக்கும்போது கதையில் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் கன்டெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கானதாக இருக்க வேண்டும்.

கதைக்களம் அழுத்தமாக இருக்கும்போதுதான் படங்கள் வெற்றி பெறுகின்றன. தரமான படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான் தமிழ் சினிமாவின் வரலாறு. அந்த வகையில், டைரக்டர்கள் தங்களுடைய வேலையை ஒழுங்காக செய்தாலே அது அவர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் விடும் என்கிறார் ரஞ்சித்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions