இந்தியா ஒரு வெட்கங்கெட்ட நாடு! - இயக்குநர் பா ரஞ்சித் சுளீர்

Bookmark and Share

இந்தியா ஒரு வெட்கங்கெட்ட நாடு! - இயக்குநர் பா ரஞ்சித் சுளீர்

என்னைப் பொருத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன் என்று இயக்குநர் பா ரஞ்சித் அதிரடியாகப் பேசியுள்ளார். மதுரையில் ஆதித் தமிழர் கட்சி நடத்திய 'மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில்' கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாசாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.உண்மையில் இது நாகரிகற்ற நாடு. மனிதனை மனிதனாகப் பார்க்காத நாடு.

இங்கு சமூக நீதியை எதிர்ப்பார்த்தால் எப்படி கிடைக்கும்? இந்த அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்யச் சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள்.

அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போயின. இந்த நிலை இனியும் தொடர வேண்டுமா?இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கின்றன. மனிதக் கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம்.

வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி சட்டமன்றம், பாராளுமன்றங்களில் பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.உணவுக்காகத்தானே இந்த வேலையைச் செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம்.

ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும். ஒரு கல்யாணம், திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்கப் போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும்.

நீங்க இந்த வேலையை மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள். 'நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடைக் கற்களை உடைக்க வேண்டும்' என்று அம்பேத்கர் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கர் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளைக் களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டுச் செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி!" என்றார் ரஞ்சித்.


Post your comment





Related News
மற்ற நடிகைகளுக்கு உதவியவர் பாவனா! ஆனால் இப்போது.. அமலா பால் உருக்கம்
எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்
ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்-சொல்லிட்டாரு !
நல்ல படங்கள் அமைவது அபூர்வமாக இருக்கிறது: டாப்சி
துப்பாக்கி சென்டிமென்டை தொடரும் முருகதாஸ்
தாங்க முடியாமல் இறந்துபோன பிரபல நடிகையின் தந்தை! மரண அவலம்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
விஸ்வரூபம் 2-ன் பெரிய தடைகள் நீங்கவிட்டன: எதை சொல்கிறார் கமல்?
தமிழக முதல்வர் ஒரு கொலைகாரர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions