பா.ரஞ்சித் குழுவினர் ரஜினி உடன் சந்திப்பு!

Bookmark and Share

பா.ரஞ்சித் குழுவினர் ரஜினி உடன் சந்திப்பு!

லிங்கா படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை அட்டகத்தி பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குவது உறுதியாகிவிட்டது. இப்படத்தைத் தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ்.தாணு இதுகுறித்து அதிகாரபூர்வமாகவே பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டார்.

அதற்கு முன் ரஜினி படத்தில் யார் யார் பணிபுரிகிறார்கள் என்ற குழப்பம் நீடித்தபடி இருந்தது. மெட்ராஸ் படத்தில் யார் யார் பணியாற்றினார்களோ அவர்கள் அத்தனை பேரும் இந்தப்படத்திலும் பணியாற்றுவார்கள் என்று பா.ரஞ்சித் சொல்லிவிட்டு மலேஷியா போய்விட்டார்.

அவர் சொன்ன ஆட்களை புக் பண்ணுவதற்காக சம்மந்தப்பட்ட ஆட்களை தொடர்பு கொண்டு அட்வான்ஸ் கொடுக்க முயன்றபோது, வழக்கமாக வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமாக பெரிய சம்பளம் கேட்டு அதிரிச்சியைக் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 1 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ரஜினி படம் என்பதால் ஆளாளுக்கு அதிகமாக சம்பளம் கேட்க, ரஞ்சித் தலையிட்டு வழக்கமான சம்பளத்தைவிட அதிகமாகவே வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக சந்தோஷ்நாராயணனுக்கு 75 லட்சம் சம்பளம். சம்பளப்பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு தன்னுடைய தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று ரஜினிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் ரஞ்சித்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions