ரஜினிக்காக 3 ஹீரோ கதையை சிங்கிள் ஹீரோ கதையாக மாற்றும் ரஞ்சித்!

Bookmark and Share

ரஜினிக்காக 3 ஹீரோ கதையை சிங்கிள் ஹீரோ கதையாக மாற்றும் ரஞ்சித்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் அடுத்து ரஜினிக்கு ஒரு மெகா ஹிட் தேவைப்படுகிறது. அதனால் ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய சில முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லியிருந்தபோதும், அவர்களின் கதை மீது ரஜினிக்கு போதுமான நம்பிக்கை இல்லை.  

அதனால், இளவட்டங்களுடன் சேர்ந்து காலத்திற்கேற்ற ஒரு கதையில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வோம் என்றுதான் ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ், மெட்ராஸ் ரஞ்சித், ராஜேஷ் எம். என பல இளவட்ட டைரக்டர்களை அழைத்து சீரியசாக கதை கேட்டார் ரஜினி.

அதில் மெட்ராஸ் பட டைரக்டர் ரஞ்சித் சொன்ன ஒரு தாதா கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனபோதும், அந்த கதையில் தாதா வேடம் மட்டுமின்றி இன்னும் இரண்டு ஹீரோ கேரக்டர்களும் அந்த கதைக்குள் இருந்ததாம்.

அதில் நடித்தால் மூன்று ஹீரோக்களில் ஒருவராகத்தான் ரஜினி இருப்பாராம். விளைவு, ரஜினிதான் அந்த படத்தில் நடிக்கிறார் என்பது முடிவானதை அடுத்து, இப்போது ரஜினியின் தாதா வேடத்தை முன்வைத்து அந்த கதையை திருத்தம் செய்து கொண்டிருக்கிறாராம் இயக்குனர் ரஞ்சித்.

மேலும், ரஜினியை வைத்தே மெயின் ஹீரோவாக கதை உருவாக, மற்ற இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திரங்களும் ரஜினியை சார்ந்தே பயணிப்பது போன்று மாற்றப்பட்டு வருகிறதாம்.


Post your comment





Related News
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions